அருணகிரியின் அருண்மழை
பாட்டு எண் 3
உம்பர் தரு = தேவர்கள் உலகில் காணப்படும் கற்பக மரம்
தேனு, மணி = காமதேனு எனும் பசு, சிந்தாமணி எனும் ரத்திநம்
(இவை அனைத்தும் பால் கடலை தேவர்களும்
அசுரர்களும கடைந்தபோது, வினாயகரைத்துதித்த
பின் அக்கடலில் இருந்து வந்தவை; இவற்றின் சிறப்பு
என்னவெனில் அவற்றின் அருகில் சென்று எதை
மனதில் நினைத்தாலும உடனே தருபவை )
கசிவாகி = இவற்றைஒப்போல, மனமும் உடனே இளகி
(என்ன ஒன்றை எதிர்பார்த்து வருபவர்க்கு)
ஒண் கடலில் = அந்த பால் கடலில் இருந்து தோன்றிய
தேன் அமுதத்து = அமிர்தம் போன்ற மகிழ்வு
உணர்வூறி = எனும் உணர்வு கூட, உதவி புரிந்து
இன்ப ரசத்தே பருகி = அதனால் ஏற்படும் ஆனந்தத்தைப்பருகிட
பாலகாலும் = எப்போதும் (எப்போதவது அல்ல)
எந்தன் உயிர்க்கு = என் ஆன்மாவுக்கு
ஆதரவு உற்று = துணை புரிந்து
அருள்வாயே = அருள்வாயாக
(எல்லா உயிரிலும், இறைவனைக்காணும் பக்குவம்
உடையோர்க்கே அப்படிப் பிறர்துயரை உடநே
துடைக்கும், பிறர் மகிழ்வில் தான் மகிழும்
தன்மை வரும். அந்த நிலை
தனக்கு அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.)
தம்பி தனக்காக = தம்பியாகிய முருகப்பெருமானின்
வள்ளியை மணக்க வேண்டும் எங்கிற விருப்பத்தை
நிறைவேற்ற அவர் நினைத்தவுடன்
வனத்து அணைவோனே = அவர் இருந்த தினைப்புனத்துக்குச் சென்றவரே
தந்தை வலத்தால் = தன் தந்தையான சிவபெருமானையும், அன்னை
பார்வதியையுமே வலம் வந்து, உலகத்தைச்சுற்றி வர
வேண்டும் எங்கிற போட்டியில் வென்று
அருள் கை கனியோனே = அவர் கையிலிருந்து அக்கனியைப்பெற்றவரே
அன்பர்களுக்கான = வ்ணங்கும் பக்தர்கள் அடையக்கூடிய
நிலைப்பொருளோனே =மோக்ஷமாகிய நிலையான பொருளே
ஐந்து கரத்து = ஐந்து கைகளை உடைய
ஆனை முக = யானை முகத்தோடு கூடிய
பெருமாளே = தலைவரே
பொழிப்புரை :
கற்பக மரம், காமதேனு, சிந்தாமணி இவை போல உடனே மனம் இரங்கி, அமிர்தம் போல மிகுந்த மனமகிழ்வோடு மற்றவர்க்கு நான் உதவி செய்து ஆநந்தப்படும்படியான மனம் எனக்கு எப்போதும் இருக்கும்படியான அருள் புரிவாயாக; (இப்படியும் கொள்ளலாம். கற்பகமரம், காமதேனு, சிந்தாமணி இவை போல நீ மனம் உடனே இளகி, மனம் மகிழ்ந்து, நான் ஆத்மானுபவமான அமுதத்தை எப்போதும் பருகும் படி எனக்கு அருள் புரிவாயாக) நீ எப்படி உன் தம்பிக்கு உதவ உடனே வள்ளி மலைத்தினைபுனத்திற்குச்சென்று உதவினாயோ அப்படி. உலமே தந்தையும் தாயும் என்று, தந்தையான சிவபெருமானையும், உடன் இருந்த உமை அன்னையையுமே சுற்றி வந்து அவர்கள் கையால் கனியைப்பெற்றவனே. பக்தர்கள் அடையும் முக்தி எனும் நிலையே (ஆனந்தமே). ஐந்து திருக்கரங்களும், ஆனை முகமும் உடைய பெருமானே.
சின்தாமணியே போற்றி போற்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக