கள்ள விநாயகர் பதிகம்

கள்ளப்பிள்ளையார் பதிகம்


    





                        கள்ள விநாயகர் பதிகம்

அமாவாசை அன்று மாலை முழு நிலா வானில் வரவில்லை என்றால் தனக்கு எமலோகத்தில் வரவேற்பு என்ற நிலையில், அபிராமி பட்டர் மறவாமல் அன்னைக்கு முன் இந்தக்கள்ளபிள்ளையாரை வேண்டினார் அவளைத்துதிக்கத்தனக்கு மதியும் நல்ல விதியும் தரவேண்டி. 

அந்தப்பதிகமும் பொருளும் இதோ உங்களுக்காக.

1.   பங்கய = தாமரை போன்ற
      ஒரு நான்கு தோளும்    =  நான்கு கைகளும் 
      படா(ம் ) முகமும்            = (யானைகளுக்கே உரிய )முகபடாம் எனும் அணி                                                                          அலங்கரிக்கும் முகமும் 
     திங்களின் கோடும்       = (தலையில் சூடிய கொம்பு போல் வளைந்து                                                                                தோன்றும்) சந்திரக்கீற்றும்                                                                                                                    (அல்லது சந்திரன்போல் ஒளிவிடும்  தந்தமும்) 
    வளர் மோதகத்துடன்    = பெருகும் ஆனந்தமாகிய மோதகமும் 
    செங்கையிலே                  = அழகான கைகளில் 
    அங்குச பாசமும் ஆகி வந்து = (மனமாகிய) யானையை அடக்க உதவும் 
                                                        தோட்டி எனும் கருவியும், (பந்தங்களில்) ஈடு                                                                        படுத்தும் ஆசையாகிற ) கயிறும் ஏந்தி என் முன்                                                              தோன்றி 
எந்தனை ஆண்டு அருள்வாய் = என்னை உன் தொண்டனாக ஏற்று அருள் 
                                                                    புரிவாய் 
வெங்கயமே                            = வலிமை பொருந்திய ஆனை  வடிவினனே 
கடவூர் வாழும் கள்ள விநாயகனே = திருக்கடவூர் தலத்தில் கோயில் கொண்டு 
                                                            மறைவாக இருக்கும் மேலான தலைவனே 

2.  உண்ணும் பொழுதும் = நான் உணவு உட்கொள்ளும் பொழுதும் 
     உறங்கும் பொழுதும்   = ஏன் என்னை மறந்து தூங்கும் போதும் கூட 
    ஓரு தொழிலை பண்ணும் போதும் = ஏதோ ஒரு செயலில் மும்முரமாக  
                                                       ஈடுபட்டு இருக்கும்போதும் 
    பகரும் பொழுதும்        = பேசுகின்ற போதும் 
   நின் பாதத்திலே             = உன் திருப்பாதங்களில் 
    நண்ணும் கருத்து          = ஒன்றிசேர்ந்து இருக்கும் சிந்தை 
    தமியேனுக்கு                   = (உன்னைத்தவிர வேறு) ஆதரவற்ற எனக்கு 
   என்றைக்கு நல்குவையோ = என்றுதான் நீ  தரப்போகிறாயோ 
  விண்ணும் புகழ               = மனிதர்கள் மட்டுமன்றி தேவர்களும் எல்லோரும்                                                                போற்றி வணங்கும்படி 
  கடவூர் வாழும் கள்ள விநாயகனே = திருக்கடவூர் தலத்தில் கோயில் கொண்டு 
                                                            மறைவாக இருக்கும் மேலான தலைவனே 

3.  யாது ஓன்றையாகிலும் = எந்த ஒரு செயல் ஆனாலும்  
எண்ணியபோது                    =  அதைச்செய்ய எண்ணினால் 
 உன் இணைக்கமல பாதம் = உன்னுடைய இரண்டு தாமரைப்பாதங்களை 
 பரவிய பேர்கள்க்கு அலாது = வணங்கியவர்களைத்தவிர்த்து மற்றவர்களுக்கு 
பலித்திடுமோ                            = அக்காரியம் கைகூடுமோ (கூடாது) 
பேதம் தெரிந்த                          = இந்த ரகசியத்தை அறிந்த 
மறையோர்                                 = அந்தணர்கள் 
தமது பெரும் தெருவில்          = தாங்கள் வாழும் அக்ராஹாரம் எனும்  வீதி 
                                                             களில் 
வேதம் பயில்     = வேதங்களை ஓதுகின்ற 
கடவூர் வாழும் கள்ள விநாயகனே = திருக்கடவூர் தலத்தில் கோயில் கொண்டு 
                                                                          மறைவாக இருக்கும் மேலான தலைவனே 
(திருக்கடவூரிலும் மற்ற தலங்களிலும் அந்தணர்கள் வேதம் ஓதுவது எல்லா பழந்தமிழ் இலக்கியங்களிலும்  சிறப்பித்துக்கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. )

4.    அரன் என்பவனையும்  = சிவபெருமானையும் 
அம்புயதோனையும்              = தாமரையில் வீற்றிருக்கும் பிரமனையும்   ஆழி, சங்கு கராதனையும்              = கையில் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு    
                                                              பகவானையும்
கை தோழ வேண்டி                = கூட பூஜிக்க விரும்புபவர் 
உன் கால் வணங்குவர்        = முதலில் உன் சரணங்களை பூசிப்பார்கள் (எந்த                                                                  தெய்வத்துக்கு பூசை என்றாலும் முதலில் விநாயக                                                             பூசைதான் என்பதைக் கூறுகிறார்.)
இரவும் பகலும்                      = இரவிலும் பகலிலும்
இயல் இசை நாடகம் எனும் = உரை நடை, பண்ணோடு கூடிய கவிதை,                                                                                 பண்ணும் அபிநயமும் சேர்ந்த நாட்டியம்  
                                                             இம்மூன்று வகையில்  விளங்கும் 
நன்னூல் விரவும் தமிழ்      =   நல்ல காவிய/இலக்கியங்கள் நிறைந்த 
                                                             தமிழ் வழங்கும் 
கடவூர் வாழும் கள்ள விநாயகனே = திருக்கடவூர் தலத்தில் கோயில் கொண்டு 
                                                            மறைவாக இருக்கும் மேலான தலைவனே 

5.   துதியேன் எனினும்       = உன்னையே நான் எப்போதும் போற்றிப்புகழாத                                                                      போதும் 
  தொழுகேன் எனினும்      = உன்னையே நான் வணங்காதபோதும் 
  தொழுபவர்தமை மதியேன் எனினும்= அப்படி உன்மேல் பக்தி                                                                                              கொண்டவர்களையும் கொண்டாடிப்                                                                                           போற்றவில்லை என்றபோதும் 
வணங்கேன் எனினும்      = (அவர்களை வணங்குவதும் உன்னை                                                                                           வணங்குவதற்குச்சமம் என்று) அவர்களை                                                                              வணங்காதபோதும் கூட  

வலியவந்து கதியே தரும்= நல்ல  செயல்கள்  ஏதும் செய்யத எனக்கு நீ 
                                                        தானாகவே வந்து நான் நல்ல நிலையை (வீடு                                                                       பேற்றை)  அடைவதற்கான வழிகளை                                                                                       எனக்குக்காட்டித்தருவாய் )
நின் கருணையினால்      =   உன்னுடைய காருண்யம் தாயை என்கிற ஒரே                                                                     பண்பின் காரணமாக (ஏனெனில் எனக்குத்தகுதி                                                                 இல்லை என்பது வெளிப்படை.)
விதியே புகழ்                         =  பிறம்மனும் கூடப்போற்றித்துதிக்கின்ற  
கடவூர் வாழும் கள்ள விநாயகனே = திருக்கடவூர் தலத்தில் கோயில் கொண்டு 
                                                            மறைவாக இருக்கும் மேலான தலைவனே 

6. நாகம், துரகம்                              = யானைப்படை, குதிரைப்படை 
 பல பணி                                           = பல விதமான ஆடை அணிகலன்கள் 
 அடை நவ நிதிகள்                        = சேர்க்கத்தகுந்த பலவித செல்வங்கள் 
பாகு அஞ்சு மென்மொழியாள் = வெல்லப்பாகும் தோற்றுப்போகும்படியான        
                                                                      இனிய சொல்லை உடைய மனைவியின் 
போகம்                                                = சுகம், துணை, இவை எல்லாம் 
உந்தன் பாடம் அதில்                    = உனது திருப்பாதங்களில் பக்தி 
மோகம் திகழ                                   = மனம் ஒன்று பட்டு 
பணிதோர்க்கு அல்லாமல்         = வணங்கினவர்களுக்கு இல்லாமல் பிறருக்கு 
முயன்றிடுமோ                               = கிடைத்திடுமோ (ஒருக்காலும் கிடைக்காது)  
மேகம் பயில்                                     = மேகங்கள் சஞ்சரிக்கின்ற 
கடவூர் வாழும் கள்ள விநாயகனே = திருக்கடவூர் தலத்தில் கோயில் கொண்டு 
                                                                            மறைவாக இருக்கும் மேலான தலைவனே 
7.  இளம் குஞ்சர செழும் கன்றே = நல்ல  வளப்பமான குட்டி யானையே 
     எனச்சொல்லி ஏத்த நின்றாய் = என்று கொஞ்சும்படியாக  இருக்கின்றாய் 
     உளங்கசிந்து அங்கையால்     = உள்ளத்தில் அன்போடு தம் கைகளால்  
 குட்டிக்கொண்டோர்க்கு               =(உன் முன்பு) லையில்                                                                                                                       குட்டிக்கொள்பவர்களுக்கு  
ஓர் குறையும் ;உண்டோ                 = எந்தக்குறையும் ஏற்படாது  
வளம் கொண்ட மூவர் தமை        = அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய 
                                                                       மூன்று பக்தர்களையும் 
மறித்தே                                                 = முறையே சூலை, பாலை, ஓலை கொடுத்து 
                                                                       சிவபெருமான் தடுத்து ஆட்கொண்டு 
தமிழ் மாலை                                       = தமிழால் ஆன பாமலை (தேவாரம்)
கொண்டு விளங்கும் புகழ்            = ஏற்றுக்கொண்ட பெருமை பெற்றுத்திகழும் 
கடவூர் வாழும் கள்ள விநாயகனே = திருக்கடவூர் தலத்தில் கோயில் கொண்டு 
                                                                          மறைவாக இருக்கும் மேலான தலைவனே 

8.  தண்டாயுதத்தையும்               = தண்டம்  என்னும் நீண்ட கம்பையும்    
 சூலாயுதத்தையும் தாங்கி        =  திரிசூலமாகிய ஆயுதத்தையும் கையில் ஏந்தி 
என்னைக்கண்டு                            =  எனனைத்தேடிக்கண்டுபிடித்து 
ஆவி கொள்ள                                   = என் உயிரைப்பறிக்க எமன் வரும்போது 
 நான்  வரும் வேளையில்            = நான் உன்னைத்தேடுவேன் அப்போது 
காத்திடுவாய்                                   = என்னைக்காப்பற்றுவாய் 
வண்டு ஆரவாரம் செய்                = வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற 
மாமலர்ச்சோலை                            = உயர்ந்த பூந்தோட்டங்கள் 
வளப்பமுடன் விண் தாவிய         = செழிப்பாக வானைத்தொடும் 
கடவூர் வாழும் கள்ள விநாயகனே = திருக்கடவூர் தலத்தில் கோயில் கொண்டு 
                                                                           மறைவாக இருக்கும் மேலான தலைவனே 
9.  மூவரும் தங்கள் தொழிலே = மும்மூர்த்திகளாக  ப்ரம்மா  விஷ்ணு,  சிவனும்                                                                         தங்கள் தங்கள் பணியாகிய படைத்தல்,                                                                                   காத்தல் ,  அழித்தல் இவை 
புரிந்திட முந்தி முந்திதாவரும்  =   நல்ல முறையில் தடங்கல் இன்றி நடந்திட 
                                                                    ஒருவரை  ஒருவர் முந்திக்கொண்டு வந்து 
நெற்றியில் தாக்கி                          = முன் நெற்றிகளில் குட்டிக்கொண்டு 
உன் நாமத்தைச்சாற்றிடுவார்  = உன் பெயர்களை உச்சரிப்பர் 
தேவரும் போற்றிய தேவே          = அங்ஙனம் தேவர்களாலும் தொழப்படும்
                                                                    தேவனே  
உன்னையன்றி  தெய்வம் உண்டோ= உன்னைவிட  மேலான தெய்வமே                                                                                                 இல்லை   

மேவரும்  சீர்                                             = மேன்மை பொருந்திய புகழ் பெற்ற 
கடவூர் வாழும் கள்ள விநாயகனே = திருக்கடவூர் தலத்தில் கோயில் கொண்டு 
                                                                        மறைவாக இருக்கும் மேலான தலைவனே 

10.  மைப்பொரு வாரண = கருமையில் மையோடு போட்டியிடும்  யானை 

மாமுக வாய்ந்த துதிக்கை பொருளே= முகத்தினில் ஒரு தும்பிக்கை உடைய                                                                                         செல்வமே 
என்று கைதொழுவார்க்கு             = `என்று  எண்ண உன்னை வணங்குபவர்கள்  
உன்  கருணை வைப்பாய்            = நீ கருணை காட்டுவாய் 
பொய்ப்பணியோ அறியாத        = பொய்யாக வணங்குபவர்கள் அறியவே       
                                                                      முடியாத (பொய்யே அறியாத)
அமுதீசன் புகழும்                             = அமிர்தகடேஸ்வரர் துதி  செய்யும் 
எங்கள் மெய்ப்பொருளே               = எங்கள்  அபிமானத்துக்குரிய நிலையான                                                                                                                 பொருளே 
கடவூர் வாழும் கள்ள விநாயகனே = திருக்கடவூர் தலத்தில் கோயில் கொண்டு 
                                                                            மறைவாக இருக்கும் மேலன தலைவனே 

          பெரிய இக்கட்டில் இருந்து விடுபடவும், வெண்ணை திரளும்போது தாழி உடையாமல் காக்கவும், பக்தியை வளர்த்துக்கொள்ளவும்  இந்தப் பதிகத்தை ஒதவும்.  

         ஹிந்துக்கள் பல தெய்வக்கோட்பாட்டை நம்புகிறவர்கள் என்று நினைபவர் கவனிக்கவும். அபிரமிபட்டர் ஒரு சாக்தர், அம்பாள் உபாசகர். 
கணபதியையும் அதே பக்தியுடன் பாடுகிறார்.  நீதான் எல்லாம் என்கிறார்.  எந்த தேவதை ரூபத்தை வணங்கினாலும்  ஒரே பரம்பொருளையே வணங்குகிறோம் என்பதை மறப்பதில்லை.

        வாழ்க வளமுடன்.  

 

கருத்துகள்