"கள்ள" எனும் சொல் திருட்டுத்தனமான என்று பொதுவாக நாம் உபயோகிக்கிறோம், அதுவே சில இடங்களில் விளையாட்டுத் தனமான/ மறைவான என்ற பொருளிலும் வரும். உதாரணம் கள்ளச்சிரிப்பு. மறைவான பாக்கெட் , வாசல் இவற்றை " சோர் (மறைவான) பாக்கெட், சோர் தர்வாஜா (மறைவான வாசல்) " என்று சொல்வார்கள்..
அதுபோலவே திருக்கடவூரில் பிள்ளையார் பெயர் மறைந்து இருக்கும் என்ற பொருளிலேயே வழங்குகிறது. இது விளையாட்டாகவே , நமக்கு இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவது இல்லை , ஆனால் தேடினால் கிடைப்பார் என்பதை உணர்த்துகிறது. இவர் இருக்குமிடம் முதலில் தெரியாது, யாரேனும் ஏற்கெனவே பார்த்தவர் காட்டினால்தான் தெரியும். கடவுளும் அப்படித்தானே. ஒரு குரு காண்பித்தால் மட்டுமே தட்டுப்படுவார் . இதையும் உணர்த்திக்கொண்டு உள்ளார் பிள்ளையார்.
அது சரி, பிள்ளையார் ஏன் எப்போது என்று புருவம் உயர்கிறதோ? அந்த வரலாளரறு இதோ .
அசுரர்களுக்கு அவர்தம் குரு சுக்ராச்சாரியார் இருக்கிறார்.போரில் இறந்த அசுரர்களை தன சஞ்சீவினி வித்தையால் உயிரோடு எழுப்பி விடுகிறார். தேவர்கள் இறந்தால் இறந்தது தான். , இதனால் தேவர்கள் பலம் குன்றிவிட அசுரர்கள் அட்டகாசம் தாங்கவில்லை. தேவர்கள், ப்ரம்மா , பின் விஷ்ணு என முறையிட , அவர் பால் கடலைக்கடைந்து (அதற்கு அசுரர்களையும் சேர்த்துக்கொண்டு) அமிர்தம் எடுத்த வரலாறு யாவரும் அறிந்ததே. அப்படிக்கடையும் முன் அக்ரபூஜனீய, முதல் வணக்கத்துக்குரிய விநாயகரை பூஜிக்க மறந்ததனால், முதலில் லட்சுமிக்குப் பதில் மூ(த்த)தேவியும் , அமிர்தத்துக்கு பதில் கள், என்று தீயவை வெளிவந்தன. அதன்பின் விநாயகரை வணங்கி, சந்திரன் , பாரிஜாதம் , உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை, ஐராவதம் எனும் யானை எல்லாமும் அமிர்தமும் வரப்பெற்றனர்.
அமிர்தம் கிடைத்த பிறகும் பங்கீட்டில் தகராறு . சுவர்பானு எனும் ராக்ஷனின் தலை போயிற்று. அவனே இன்றுவரை ராகு, கேது எனும் கிரகங்களாக வருடம் தோறும் கிரஹண காலத்த்தில் சூரியனையும் சந்திரனையும் விழுங்க வருவதாக ஐதீஹம் .
அப்புறமும் கூட தேவர்களுக்கு, நாம் அமிதம் பகிருமும் விநாயகரை துதித்து இருக்கவேண்டும் என்று தோன்றவில்லை. குழந்தைமனம் கொண்ட பிள்ளையார் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினார். துதிக்கையால் அமிர்த குடத்தை தூக்கிக்கொண்டு ஓடி இங்கே வந்து குட த்தை வைத்துவிட்டு ஒளிந்து கொண்டு விட்டார். குடம் என்பதற்கு வமொழிச்சொல் கடம் ஆகும். அந்த அமிர்த குடமே ஒரு சிவலிங்கம் ஆகி விட்டது. அதனால் தான் ஸ்வாமிக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயர். ஒளிந்து இருப்பதனால் பிள்ளையார் "சோர கணபதி", கள்ள விநாயகர் என்று வழங்கப்படுகிறார்.
தேவர்களுக்கு நினைவு வந்து, இங்கு வந்து தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்டு அமிர்தம் கிடைக்கப்பெற்றநர்.
குட்டிப்பிள்ளைகள் சுட்டித்தனம் நினைக்க நினைக்க பேரின்பம்தானே . கள்ளப்பிள்ளை என்ற பெயரிலேயே இங்கு அமர்ந்து நம் உள்ளதுக் கள்ள மெல்லாம் தள்ள உள்ளம் கொண்டிருக்கிறார் விநாயகர்.
தேவர் அசுரர் அமிர்தம் எல்லாமே குறியீடுகள். உயர்ந்த தத்துவங்கள். இப்படி கதையாக சொல்வதானால் குழந்தைக்கும் மனதில் பதியும் . அறிவு வளர வளர உண்மைபொருள் விளங்கும்.
மறைவாய் அமர்ந்த மஹோதரனுக்கு முதல் வணக்கம்
மறையின் மறைபொருளுக்கு முதல் வணக்கம்
மாணிக்கச்சுடரோனுக்கு முதல்வணக்கம்
மாற்றுரைத்த மாமணிக்கு முதல்வணக்கம்
மிகுமும்மத முகனுக்கு முதல்வணக்கம்
மின்னுமோர் கொம்பனுக்கு முதல்வணக்கம்
மீனாட்சி மைந்தனுக்கு முதல்வணக்கம்
மீகூரும் களிப்புடையோனுக்கு முதல்வணக்கம்
முப்புரம் எரித்த சிவபுத்திரனுக்கு முதல்வணக்கம்
முக்கண் சிவை மகிழ் உத்தமனுக்கு முதல்வணக்கம்
முருகனுக்கு மூத்தவனுக்கு முதல் வணக்கம்
மூன்றுக்கண்ணன் புதல்வனுக்கு முதல்வணக்கம்
மூஷிகத்தில் வருவோனுக்குய முதல்வணக்கம்
மெத்தக்கருணை உடையோனுக்கு முதல்வணக்கம்
மென்மேலும் ஊக்கம் தருவோனுக்கு முதல்வனாக்ம்
மேகநிகர் முராரி மருகனுக்கு முதல்வணக்கம்
மேதினி போற்றும் வேழமுகனுக்கு முதல்வணக்கம்
மைய்யுறு மதிப்பிறை அணிவோற்கு முதல்வணக்கம்
மூஷிகத்தில் வருவோனுக்கு முதல்
மோதகப்ரியனுக்கு முதல் நெய்வேத்தியம்
மோகம் அழிப்பவனுக்கு முதல் வணக்கம்
மௌனிகள் மனம் உறைவோனுக்கு முதல்வணக்கம்
( மூஞ்சூறு மீண்டும் வரும் )

ஆரம்பமே வெகு ஜோர்.
பதிலளிநீக்குThanks Uma
பதிலளிநீக்கு