முதல் பதிவு கடவுள் வணக்கம்


   

      மோதகப்ரியனுக்கு முதல் வணக்கம் .

           இந்த blog ஐ ப்பார்க்கிற அனைவருக்கும் பணிவான வணக்கம்.  என்னுடைய குருநாதரையும் முதல் வணக்கத்துக்கு உரிய விநாயகரையும் பணிந்து இந்த எனது புது முயற்சியைத்தொடங்குகிறேன்.

   இந்த blogஇன் நோக்கம் தெரியவேண்டும் அல்லவா?  பொதுவாக ஒவ்வொரு மண்ணுக்கும் அதாவது தேசத்திர்க்கும் ஓரு பாரம்பர்யம் இருக்கும். நமது இந்த பாரத பூமிக்கு என்று உள்ள பண்பாடு, பழக்க வழக்கங்கள் அதன் பின்னணி, காரணம் மற்றும் இன்றைய நிலை போன்றவற்றோடு இலக்கியங்களையும் சற்று ஆராயலாமே என்பதுதான் நோக்கம். என் தாய் மொழி தமிழ் ஆனதாலும் அதன் இலக்கியங்களில் ஈடுபாடு இருப்பதாலும் பெரும்பாலும் அது சார்ந்த பதி வுகள்  இருக்கலாம்.

        நாம் கடவுள் என்பது ஓர் சக்தி. ஆனால்நமக்கு வாழ்க்கையில் எத்தனையோ விதமான ஆற்றல் தேவைப்படுகிறது அல்லவா ? ஒவ்வொரு சக் திக்கும் ஒரு தனி உருவமும் பெயரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதில் விநாயகர் க்ரியா சக்தி என்பர். அவரைத்தொழுவதன் மூலம்  நம் க்ரியா சக்தி எனும் செயலாற்றலை பலப்படுத்திக்கொள்கிறோம். ஆற்றல் அதிகமானால் தடைகளை உடைக்கும் சக்தி வந்து விடும் அல்லவா. இதுவே விநாயகர் தத்துவம். 

      முதலில் திருக்கடவூர் திருத்தலத்தில் வசித்த அபிராமி பட்டர் எழுதிய கள்ள விநாயகர் துதியுடன் தொடங்குகிறேன் . 


   

கருத்துகள்

கருத்துரையிடுக